/* */

நேரு யுவகேந்திரா சார்பில் இந்திய அரசியல் அமைப்பு நாள் விழா

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் பாரதி மகளிர் கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு நாள் விழா கொண்டாடப்பட்டது

HIGHLIGHTS

நேரு யுவகேந்திரா சார்பில் இந்திய அரசியல் அமைப்பு நாள் விழா
X

புதுக்கோட்டை கைக்குறிச்சி பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு நாள் விழாவில்  வென்ற மாணவிகளுக்கு பரிசளிக்கிறார், கல்லூரியின் தலைவர் குரு. தனசேகரன்.

இந்திய அரசின் புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் இந்திய அரசியலமைப்பு நாள் விழா கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்திய அரசியல் அமைப்பு தொடர்பாக நடைபெற்ற வினாடி-வினாப் போட்டியில் கீர்த்திகா குழுவினர் முதல் பரிசும், காயத்ரி குழுவினர் இரண்டாம் பரிசும், விஜி குழுவினர் மூன்றாம் பரிசும் பெற்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கம் மற்றும் பரிசளிப்ப விழாவிற்கு நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல் பிரபாகர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சந்திர மோகன் முன்னிலை வகித்தார். நேரு யுவ கேந்திரா திட்ட உதவி அலுவலர் நமச்சிவாயம் விழா நோக்கவுரை ஆற்றினார்.

மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் மேனாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் விஸ்வநாதன் பேசியதாவது: சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் (இந்திய அரசியல் சாசன தினம்) கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1949-ல் நவம்பர் 26-ம் தேதியான இதே நாளில், இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது. இது ஜனவரி 26, 1950 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை தான் நாம் ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.

அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று கொண்டதற்கும், அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான 2 மாத காலமானது, சட்ட வரைவை முழுமையாக படித்து மொழிபெயர்க்க (ஆங்கிலத்திலிருந்து இந்தி வரை) எடுத்து கொள்ளப்பட்டது. பின் 1950 ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட கையால் எழுதப்பட்ட 2 ஆவண பிரதிகள் இருந்தன. அடுத்த 2 நாட்களில் அவை இந்தியாவின் சட்டமாக மாறின. இதனிடையே இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்று கொள்ளப்பட்டு 72 ஆண்டுகள் ஆகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் தந்தையாக குறிப்பிடப்படும் அம்பேத்கரின் சமத்துவ சிலை மற்றும் நினைவகத்தை மும்பையில் அமைக்க அடிக்கல் நாட்டும் போது பேசிய பிரதமர் மோடி, இனி நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனை தொடந்து இந்திய அரசியலமைப்பு சாசன வரைவுக்குழு தலைவராக செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரை நினைவுகூர்ந்து கவுரவிக்கும் விதமாகவும், இந்திய அரசியலமைப்புக்காக அயாரது பாடுபட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தும் விதமாகவும் கடந்த 2015-ல் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்திய அரசியல் சாசன தின கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 19, 2015 அன்று, அரசிதழில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மோடி அரசு, நவம்பர் 26-ம் தேதியை இந்திய அரசியலமைப்பு நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மேலும் இந்திய அரசியலமைப்பு நாளானது அரசியலமைப்பின் மதிப்பை மக்களுக்கு உணர்த்துவதற்காகவும், நாட்டு குடிமக்களுக்கான நீதி, சமத்துவம் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்துகிறது. இதனிடையே அரசியலமைப்பின் சித்தாந்தத்தை நிலைநிறுத்த மற்றும் கடைப்பிடிக்க நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த அரசியலமைப்பின் முகவுரையை வாசிப்பது இந்நாளில் கொண்டாட்டங்களின் ஒருங்கிணைந்த மற்றும் முக்கிய பகுதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது என்றார் பேராசிரியர் விஸ்வநாதன்.

பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு ஸ்ரீபாரதி மகளிர் கல்வியியல் கல்லூரி தலைவர் தனசேகரன் நேரு யுவ கேந்திரா சார்பில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஸ்ரீபாரதி மகளிர் கல்வியியல் கல்லூரி துணை முதல்வர் சுப. தாரகேஸ்வரி வரவேற்றார். நிறைவாக நேரு யுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் செல்வி. மணிமேகலை அனைவருக்கும் நன்றி கூறினார்

Updated On: 29 Nov 2022 9:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  3. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  4. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  6. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  7. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  9. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  10. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...