/* */

புதுக்காேட்டை: தேர்தலை ரத்து செய்ய கோரி ஆம் ஆத்மி வேட்பாளர் ஆட்சியரிடம் மனு

புதுக்காேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 34 வது வார்டு ஆம் ஆத்மி வேட்பாளர் தேர்தலை ரத்து செய்யக்கோரி மனு அளித்துள்ளார்.

HIGHLIGHTS

புதுக்காேட்டை: தேர்தலை ரத்து செய்ய கோரி ஆம் ஆத்மி வேட்பாளர் ஆட்சியரிடம் மனு
X

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட34 வாது வார்டில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் அப்துல் ஜாபர் தேர்தலை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 34வது வார்டு வாக்காளர் பட்டியலில் அதிக அளவு குளறுபடிகள் இருப்பதால் தேர்தலை ரத்து செய்து தள்ளி வைக்க கோரி ஆட்சியரிடம் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் புகார் மனு அளித்துள்ளார்.

புதுக்கோட்டை நகராட்சி உள்ள 42 வார்டுகளிலும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக ஏற்கனவே நகராட்சியில் நடைபெற்ற வேட்பாளர் கூட்டத்தில் அதிமுக பாஜக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி தூக்கி இருந்தனர் அப்போது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடித்து வைத்தனர்

இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 34 வது வார்டின் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் அப்துல் ஜாபர் என்பவர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, 34 வது வார்டில் வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய குளறுபடி நடைபெற்றுள்ளது. இறந்த வேட்பாளர்கள் 80க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளது.

இதேபோன்று வாக்காளர் பட்டியலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இரட்டைப்பதிவு உள்ளது இதனால் தேர்தல் முறையாக நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லை எனவே வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்துவிட்டு எனது வார்டில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை அவர் நாட போவதாகவும் செய்தியாளரிடம் அவர் கூறினார்.

இதேபோன்று நகராட்சியில் உள்ள மற்ற நாடுகளிலும் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் அதிக அளவு உள்ளது வேட்பாளர்கள் என்ன செய்வது என்று புரியாமல் திணறி வருகின்றனர் என்றும் அவர்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து தேர்தல் முறையாக நடத்துவதற்கு தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Updated On: 14 Feb 2022 11:29 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்