/* */

புதுக்கோட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள் 69.78% வாக்குகள் பதிவு

வாக்கு எண்ணிக்கை 12.10.2021 அன்று காலை 8 மணிக்கு தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள் 69.78% வாக்குகள் பதிவு
X

பைல்படம்

புதுக்கோட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள் 69.78% வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த பதவியிடங்களுக்கு (09.10.2021) இன்று நடைபெற்ற தற்செயல் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவில் 69.78% வாக்குகள் பதிவாகின.

இவற்றில், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு எண். 9-க்கான தேர்தலில் 68.27% வாக்குகள் பதிவாகின. பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் அரசமலை கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலில் 77.20% வாக்குகளும், மறவாமதுரை கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலில் 73.96%வாக்குகளும், ஆர்.பாலக்குறிச்சி கிராம ஊராட்சி வார்டு எண்.7-க்கான உறுப்பினர் தேர்தலில் 69.66% வாக்குகளும் பதிவாகின.

அரிமளம் ஊராட்சி ஒன்றியம் கீழப்பனையூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 71.95% வாக்குகளும், நல்லம்பாள்சமுத்திரம் கிராம ஊராட்சி வார்டு எண்.2-க்கான உறுப்பினர் தேர்தலில் 67.46% வாக்குகளும், திருவாக்குடி கிராம ஊராட்சி வார்டு எண்.5-க்கான உறுப்பினர் தேர்தலில் 52.82% வாக்குகளும் பதிவாகின. திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், மாங்காடு கிராம ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 81.38% வாக்குகளும், குலமங்கலம் தெற்கு கிராம ஊராட்சி வார்டு எண்.9-க்கான உறுப்பினர் தேர்தலில் 76.28% வாக்குகளும்.

வேங்கிடகுளம் கிராம ஊராட்சி வார்டு எண்.7-க்கான உறுப்பினர் தேர்தலில் 68.46% வாக்குகளும் பதிவாகின. திருமயம் ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு எண்.5-க்கான உறுப்பினர் தேர்தலில் 73.08% வாக்குகளும், நெய்வாசல் கிராம ஊராட்சி வார்டு எண்.9-க்கான உறுப்பினர் தேர்தலில் 56.57% வாக்குகளும், பி.அழகாபுரி கிராம ஊராட்சி வார்டு எண்.4-க்கான உறுப்பினர் தேர்தலில் 48.98% வாக்குகளும் பதிவாகின. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தாணி கிராம ஊராட்சி வார்டு எண்-6க்கான தேர்தலில் 60.77% வாக்குகளும் பதிவாகின.

பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் அனைத்தும் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 12.10.2021 அன்று காலை 8.00 மணிக்கு தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Oct 2021 5:00 PM GMT

Related News