/* */

நாளை பள்ளிகள் திறப்பு : பல்வேறு பள்ளிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

பள்ளிகளில் கோவிட் தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

HIGHLIGHTS

நாளை பள்ளிகள் திறப்பு : பல்வேறு பள்ளிகளை ஆய்வு செய்த  மாவட்ட ஆட்சியர்
X

 புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசுமேல்நிலைப்பள்ளியில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் கவிதாராமு. உடன் முதன்மைகல்வி அலுவலர் சாமி.சத்திமூர்த்தி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, மேற்கொள்ள வேண்டிய கோவிட்-19 முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, திருக்கோகர்ணம் அரசுமேல்நிலைப்பள்ளியில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பள்ளிகளில் ஆய்வு செய்தபின்னர் ஆட்சியர் கூறியதாவது:தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, அனைத்துப்பள்ளிகளிலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வரையிலான வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. அதனடிப்படையில், தற்போது புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் நேரில் ஆய்வு செய்யப்பட்டது.


இந்த ஆய்வில் மாணவர்களின் வகுப்பறை, மின்விளக்கு வசதி, குடிநீர்வசதி, கழிவறை வசதி போன்ற பல்வேறு வசதிகள் ஆய்வு செய்யப்பட்டது. பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிதல், இடைவெளிவிட்டு அமர்தல், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தவறாது கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் போன்றவை குறித்து அறிவுறுத்தப்பட்டது.

பள்ளிகளில் தவறாது கோவிட் தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 31 Aug 2021 9:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்