/* */

பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் ஓட்டம்

பொது சுகாதாரத்துறை 1922-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு, நூறு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி இந்த ஓட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் ஓட்டம்
X

பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மினி மாரத்தான் ஓட்டத்தினை,  சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியசைத்து தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மினி மாரத்தான் ஓட்டத்தினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (27.11.2022) கொடியசைத்து துவக்கி வைத்து பேசுகையில்,

பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக இன்றையதினம் மினிமாரத்தான் ஓட்டப்பந்தயம் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்துறை 1922-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு, நூறு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவினையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் தமிழகத்தின் அனைத்து மாவட்ட பகுதியிலும், உலக சாதனை ஏற்படுத்தம் நிகழ்வாக ஒரே நாளில் இன்றைய தினம் நடத்தப்பட்டது.

இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில், பல்வேறு துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுசுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 1000 பேர் பங்கேற்று, புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் துவங்கி, பழைய பேருந்துநிலையம், அண்ணாசிலை, பிருந்தாவனம், பழனியப்பா கார்னர், திலகர் திடல், பால்பண்ணை கார்னர், பிஎல்ஏ ரவுண்டானா, கேகேசி ரவுண்டானா வழியாக, 5 கிலோ மீட்டர் தூரத்தில், புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் முடிவடைந்தது.இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.ரகுபதி குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) மரு.ச.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), மரு.கலைவாணி (அறந்தாங்கி), மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.எம்.குமரன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.



Updated On: 27 Nov 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...