/* */

முகக்கவசம் அணிவது கட்டாயம்: புதுக்கோட்டை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்

பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என புதுக்கோட்டையில் நகராட்சி சார்பில் மீண்டும் விழிப்புணர்வு பிரசாரம்

HIGHLIGHTS

முகக்கவசம் அணிவது கட்டாயம்: புதுக்கோட்டை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
X

புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கும் நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் துணைத்தலைவர் லியாக்கத் அலி உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள்

புதுக்கோட்டையில் முகக்கவசம் அணிய வேண்டும் என மீண்டும் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பக்கத்து மாநிலங்களான டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

அதேபோல் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு அதிக அளவில் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் மீண்டும் முகக்கவசம் பொதுமக்கள் அணியவேண்டும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

அதன்படி நேற்று முதல் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல் தமிழகம் முழுவதும் அரசு அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முக கவசம் அணிவது தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது என கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை நகராட்சி சார்பில் மேல ராஜ வீதியில் அதிக அளவில் கூட்டமாக கூடிய ஆனந்தம் ஜவுளி கடை முன்பு பொதுமக்களுக்கு புதுக்கோட்டை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் ,நகர்மன்ற துணைத்தலைவர் லியாக்கத் அலி மற்றும் நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி வைரஸ் தொற்று பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் முக கவசம் அணிவது தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் கிருமிநாசினி மருந்துகளை பயன்படுத்த வேண்டும் எனவும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவிவரும் சூழ்நிலையில், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி முககவசம் அணியாமல் சென்ற பொது மக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Updated On: 23 April 2022 7:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!