/* */

அரசின் நெறிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு போட்டிகள்:புதுக்கோட்டையில் கலந்தாய்வு

ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசின் நெறிமுறைகளின்படி நடத்துவதுகுறித்து ஆட்சியருடன் கண்காணிப்பு அலுவலர் மிட்டல் ஆலோசனை

HIGHLIGHTS

அரசின் நெறிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு போட்டிகள்:புதுக்கோட்டையில் கலந்தாய்வு
X

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டுபோட்டிகளை அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி நடத்துவது குறித்து  ஆய்வு நடத்திய ஆட்சியர் கவிதாராமு,  கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல், எஸ்பி. நிஷாபார்த்திபன் உள்ளிட்டோர்

அரசின் நெறிமுறைகளின்படி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை புதுக்கோட்டையில் கலந்தாய்வு நெறிமுறைகள் அடிப்படையில் நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அரசு வகுத்துள்ள நெறிமுறைகள் அடிப்படையில் நடத்துவது தொடர்பாக, இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் முனைவர்.எஸ்.கே.மிட்டல், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மற்றும் அலுவலர்களுடன் (18.03.2022) கலந்தாய்வு மேற்கொண்டனர்.

இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பான கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டினை மீட்டெடுத்து, தொடர்ந்து நடைபெறும் வகையில் அரசு ஜல்லிக்கட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் போட்டிகள் நடத்த தகுந்த ஏற்பாடுகளை விழா குழுவினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதனடிப்படையில் போட்டிகளில் முழு உடல் தகுதி பெற்றுள்ள காளைகள் மட்டும் பங்கேற்க வேண்டும். மேலும் வீரர்கள் அனைவரும் அரசு தெரிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். போட்டியை கண்டுகளிக்கும் பார்வையாளர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் இரண்டு அடுக்கு இரும்பு தடுப்புகளை அமைக்க வேண்டும். இப்போட்டி நடைபெறும் இடத்தில் வீரர்களுக்கும், காளைகளுக்கும் காயங்கள் ஏற்படாத வகையில் தேங்காய் நார் உள்ளிட்டவைகளை கொண்டு நிரப்பிட வேண்டும்.

போட்டிகளில் பாதிப்பு ஏற்படும் மனிதர்கள் மற்றும் காளைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் போதுமான அளவில் மருத்துவ குழுவினர் இருப்பதை உறுதி செய்யவும், நிகழ்ச்சிகள் அனைத்தையும் சி.சி.டி.வி. கேமரா மூலம் பதிவு செய்திடவும், மேலும் நிகழ்ச்சி எவ்வித சட்டம், ஒழுங்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் காவல் துறையினர் மூலமாக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.ஜல்லிக்கட்டுப் போட்டியை அரசு வகுத்துள்ள நெறிமுறைகளின் அடிப்படையில் அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர்கள் அனைவரும் போட்டிகளை நடத்திட வேண்டும் என இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர்கள் கருணாகரன், குழந்தைசாமி, சு.சொர்ணராஜ், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சம்பத், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ரீராம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 18 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...