/* */

தடுப்பூசி போட்டவங்களுக்கு ஒரு சட்டை ஒரு ரூபாய்: அசத்திய கடைக்காரர்

கொரோனா தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை என விற்பனை செய்த கடைக்காரர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை கீழ 2 தெற்கு 3ம் சந்திப்பில் புதிதாக லூ லூ ரெடிமேட்ஸ் என்ற மென்ஸ்வேர் ஜவுளிக்கடை இன்று திறக்கப்பட்டது. இன்று ஜவுளிக்கடைக்கு வரும் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் 100 பேருக்கு மட்டும் ஒரு ரூபாய்க்கு விலை உயர்ந்த சட்டைகள் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

கொரோனா வைரஸ் தொற்று பற்றி விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாகவும், அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தடுப்பூசியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்

அதன்படி இன்று கடை திறப்பதற்கு முன்பே இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு அதற்கான சான்றிதழுடன் வரிசையாக நின்றனர். கடை திறந்த பிறகு தனிமனித இடைவெளி மற்றும் முககவசம் அணிந்து வரிசையாக நின்ற இளைஞர்களுக்கு ஒரு ரூபாய் காயினை வாங்கிக்கொண்டு 500 ரூபாய் மதிப்புள்ள சட்டைகளை வழங்கினார்.

தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று ஒரு நாள் மட்டும் இதுபோன்ற விளம்பரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய கடையின் உரிமையாளர் அனீசை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Updated On: 23 Aug 2021 6:51 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!