/* */

புதுகை சிட்டி ரோட்டரி சார்பில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

இந்த இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாமில் சுமார் 150 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

HIGHLIGHTS

புதுகை சிட்டி ரோட்டரி சார்பில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்
X

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற  இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

இலவச சர்க்கரை நோய் பரிசோதனை, ஆலோசனை மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், துரைசாமி நர்சிங் ஹோம் இணைந்து நடத்திய இலவச சர்க்கரை நோய் பரிசோதனை, ஆலோசனை மற்றும் பல் பரிசோதனை முகாம் சங்கத் தலைவர் ஆர். சிவக்குமார் தலைமையில் புதுக்குளம் வளாகத்தில் நடைபெற்றது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி கண. மோகன்ராஜா வரவேற்றார். நகர்மன்ற உறுப்பினர்கள் பால்ராஜ், பிரேம் ஆனந்த், கனக அம்மன் பாபு, முன்னாள் துணை ஆளுநர் எஸ்.பார்த்திபன் மருத்துவர்கள் டி.வெங்கடேசன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தனர்.

நிகழ்வில் டாக்டர் ஆர்.துரைநாகரத்தினம், டாக்டர் வி.தரணீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் ஜி.தனகோபால், பி. அசோகன், ஏ.ஆரோக்கியசாமி, ஆர்.முருகேசன், பி.குணசேகரன் பி. கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக சங்க பொருளாளர் ஏ.ஆர்.முகமது அப்துல்லா நன்றி கூறினார். முகாமில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 July 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...