/* */

புதுக்கோட்டையில் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் கடந்த ஒரு வருட காலமாக முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட தொண்டைமான் நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு நகராட்சி மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வருட காலமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த ஆறு மாத காலமாக 20 நாளுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Updated On: 22 Sep 2021 6:12 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!