/* */

புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு

புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு
X

தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டும்.

சாலைகளில் தேவை இல்லாமல் பொதுமக்கள் சுற்றி திரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிரமாக சோதனை பணிகளை மேற்கொண்டு தேவையில்லாமல் வாகனங்களில் வரும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எச்சரிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர்.

புதுக்கோட்டை நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் தலைமையில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக சாலைகள் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணிகளில் தீவிரமாக நடைபெற்றது.

Updated On: 25 April 2021 10:30 AM GMT

Related News