/* */

திமுக அரசைக்கண்டித்து புதுக்கோட்டையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்வதற்கான அறிவிப்பு அரசாணையை மத்திய அரசு வெளியிடவில்லை என்றார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா

HIGHLIGHTS

திமுக அரசைக்கண்டித்து புதுக்கோட்டையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா

தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்வதற்கான அறிவிப்பு அரசாணையை மத்திய அரசு வெளியிடவில்லை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி

தாய்மொழி தமிழுக்கு முடிவுரை எழுத நினைக்கும் திமுக அரசை கண்டித்து புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜ.க தேசிய குழு உறுப்பினர் எச்.ராஜா சிறப்பு அழைப்பாளர் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: முதல்வரின் பொய் பேச்சு, திமுகஅரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு உகந்தது. கோவையில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து நான்கு தினங்களாக தமிழக முதல்வர் சம்பவம் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை. திமுக தனது வாக்கு வங்கியை தக்க வைப்பதற்காக தான் தற்போது என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த கிடுக்கு பிடி அழுத்தத்தால்தான், தமிழக முதல்வர் வேறு வழியின்றி இந்தவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் கோவையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஆகியோர் ஜமாத் கூட்டமைப்பு அழைத்து பேசியிருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், ஏன் இந்து அமைப்பினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காது என்று கூறவில்லை.

பாஜக சார்பில் சட்டமன்றத்தில் 24 உறுப்பினர்கள் இருந்திருந்தால் ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்திருக்கும், ஏனென்றால் சட்டமன்றத்தில் ஹிந்தி திணிப்பு தொடர்பாக பொய்யான கருத்துகளை கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். பாஜக- அ.தி.மு.க உடன் தான் கூட்டணியில் உள்ளது. எந்த ஒரு அணியுடனும் அல்ல. மதமே இல்லாத தமிழ்.இந்துவாக மாறினால் என்ற தவறு. தீவிர வாத இயக்கத்தை தடை செய்தபோது தமிழக அரசு நன்றி தெரிவித்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை.

மனித சங்கிலி நடத்திய அனைவருமே இந்த மண்ணின் விரோதிகள். அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள். இஸ்லாமிய பயங்கர வாதத்தால் கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பின் போது அத்வானியுடன் நானும் இருந்தேன். அப்போது 52வயது தாய் தனது மகனை இழந்து தவித்தார். தனக்கு எப்படி வேறு ஒரு குழந்தை கிடைக்கும் என கதறினார் அந்தத்தாய். நாட்டில் பயங்கரவாத செயலை வேருடன் அறுத்தெரிய பிரதமர் மோடியும், அமித் ஷாவும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக ஆட்சியால்தான் தீவிரவாதத்தையும் தீவிரவாதிகளையும் ஒழிக்க முடியும் என்றார் எச். ராஜா.

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திமுக அரசை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமை வகித்தார். நகர செயலாளர் காடுவெட்டியார் குமார் முன்னிலை வகித்தார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

Updated On: 27 Oct 2022 1:30 PM GMT

Related News