/* */

வெற்றிலை- பாக்கு... நன்மைகளும் மருத்துவ குணங்களும்... ஒரு பார்வை...

Vetrilai Pakku in Tamil-வெற்றிலையில் மிகவும்வீரியமிக்க நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்ற பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

HIGHLIGHTS

Vetrilai Pakku in Tamil
X

Vetrilai Pakku in Tamil

Vetrilai Pakku in Tamil-வெற்றிலை பாக்கு போடுவதால் ஏற்படும் நன்மைகளும் மருத்துவ குணங்களையும் பார்க்கலாம்.

வெற்றிலை பாக்கு போடுவது (தாம்பூலம் தரிப்பது) நம் நாட்டின் பண்டைய காலம் தொட்டு இருந்து வரும் வழக்கம்இந்த வெற்றிலையில். வைட்டமின் ஏ சத்தும் இருக்கிறது.

உலகில் உள்ள மக்கள் தொகையில் பத்தில் ஒரு பகுதியினர் வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள். பொதுவாக இந்தப் பழக்கம் கிழக்கு நாடுகளில்தான் அதிகம்.17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்த ரஷ்ய யாத்திரிகர் நிக்கொலாவ் மனூஸி என்பவர் தான் முதன்முதலாக வெற்றிலை பாக்கு போட்டு அனுபவித்ததை தன்னுடைய சுயசரிதையில் எழுதி இருக்கிறார். சூரத் நகரில் அவருக்கு ஒரு பெண்மணி தாம்பூலம் கொடுத்து உபசரித்தபோது அதை நிக்கொலாவ் மென்று தின்றாராம். உடனே அவருடைய முகம் வியர்த்ததாம், தலை சுற்றியதாம். தாம் இறந்து விடுவோமோ என்று அஞ்சினாராம். அதைக் கண்ட அப்பெண்மணி அவர் வாயில் உப்புக்கரைசலை ஊற்றினாராம். அதன்பின் சரியாகிவிட்டாராம்.

நிக்கொலாவ் மனூஸிக்கு மட்டுமல்ல. முதன்முறையாக தாம்பூலம் சாப்பிடுபவர்கள் பலருக்கு அம்மாதிரி நிலை ஏற்படுவது வழக்கம்.சீனர்கள் வெற்றிலையை இடது கையால் வாங்க மாட்டார்கள். நம் நாட்டிலும் இதுபோல நம்பிக்கை உண்டு. மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் ஒரு தடவை வெற்றிலையை இடது கையால் எடுத்து விட்டாராம். அக்குற்றத்திற்கு கழுவாய் தேட நோன்பு நூற்றதாக வரலாறு கூறுகிறது.

திருமணத்திற்கு வெற்றிலை முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. தாலி இல்லாமல் கூட திருமணத்தை நடத்தி விடலாம். ஆனால் வெற்றிலை இல்லாமல் திருமணம் நடக்காது. திருமண நிச்சயம் செய்யும் சடங்குக்கு நிச்சய தாம்பூலம் என்றுதான் பெயர். திருமணப் பேச்சினை உறுதிப்படுத்தி, அதன் இறுதியில் இருவீட்டாரும் வெற்றிலையைத்தான் மாற்றிக் கொள்வார்கள். அதனால்தான் அந்த சடங்கிற்கு நிச்சய தாம்பூலம் என்று பெயர் வந்தது.

திருமணத்திற்கு வெற்றிலை பயன்படுவதுபோல விவாகரத்திற்கும் பயன்படுகிறது. சுமித்ராவில் மனைவியைப் பிரிய விரும்பும் கணவன் வெற்றிலையை அவளிடம் கொடுத்து மூன்றுமுறை தலாக் சொல்லிவிட்டால் விவாகரத்து ஆகிவிட்டதாக அர்த்தம்.குற்றவாளியை தூக்கில் இடுவதற்கு முன்பு அவர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்கும் வழக்கம் பர்மாவில் நீண்ட காலமாகவே இருந்ததாம்.

சிறையில் அடைபட்டுக் கிடக்கும் கைதிகளுக்கு மலேரியா போன்ற நச்சுக் காய்ச்சல் வராமல் இருக்க அவர்களுக்கு வெற்றிலை கொடுப்பது நெதர்லாந்து வழக்கம்.தமிழ்நாட்டில் திருவையாறு அருகில் உள்ள கண்டியூர், நடுக்கடை, கும்பகோணம் அருகில் ஆவூர், சுப்ரமணிய சாமி புகழ் சோழவந்தான் முதலிய ஊர்கள் வெற்றிலைக்குப் புகழ் பெற்றவை.

வெற்றிலை நல்ல கிருமி நாசினி: நாட்டு வைத்தியர்கள் வெற்றிலையில் வைத்து விழுங்குமாறு பல மருந்துகளைப் பரிந்துரை செய்வது அதன் மருத்துவ குணம் அறிந்ததால் தான்..வெற்றிலைக்கு சமமான சீதோஷ்ண நிலை தேவை. அதிக வறட்சியைத் தாங்காது கருகி விடும், அதிக மழையைத் தாங்காது. அழுகி விடும். வெற்றிலையை அகத்தி மரத்தில் படரவிட்டு தான் வளர்ப்பார்கள்.

வெற்றிலை சீரண சக்தியை மேம்படுத்துகிறது தெரியும் பலருக்கு தெரிந்திராத செய்தி ஒன்று. அது உறவையும் பலப்படுத்தும். மண பந்தம் உறுதியானதை அறிவிக்க பாக்கு மாற்றுவதினால் மட்டுமல்ல. முதலிரவில் பால் பழங்களோடு தாம்பூலத்தை வைப்பதினாலும்தான். தமிழகத்தில் சுப நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, துக்க காரியங்களில் கூட தாம்பூலம் பங்களிக்கிறது.

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது என்று கூறப்படுகிறது. இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கட்டுப்படுத்து கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை சுத்தப்படுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவாகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.

பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான் வெற்றிலை பாக்கை உபயோக்கி வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

கும்பகோணம் வெற்றிலை: தமிழ்நாட்டில் கும்பகோணத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு ஆகிய ஊர்களிலும் அதிகமாக பயிராகிறது. வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள்

வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். மிதமான தட்பவெப்பம், மண்வளம், தண்ணீர்வசதி உள்ள பகுதிகளில் வெற்றிலை பயிராகும். கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண் வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண் வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.மருத்துவ குணங்கள் வெற்றிலைக்கு நிறைய உண்டு. உணவு செரிக்க, ரணங்கள் தீர பயன்படுத்துகிறார்கள். தமிழர்கள் வெற்றிலையை எல்லா மங்கள காரியங்களுக்கும் பயண்படுத்துகிறார்கள்.

வெற்றிலையில் உள்ள சத்துக்கள்: வெற்றிலையில் 84.4 சதவீதம் நீர்ச்சத்தும், 3.1 சதவீதம் புரதச் சத்தும், 0.8 சதவீதம் கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44. தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

மருத்துவப் பயன்கள்:

1.. அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

2.. சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.

3.. வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.

4.. வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

5.. குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல், ஜன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கசக்கி தேனுடன் கலந்து கொடுத்தால் காய்ச்சல் ஜன்னி, சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

6.. வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

7.. குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

8.. வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.

9.. கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

10.. வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.

11.. சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.

12.. குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.

13.. வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

14.. நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.

15.. சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.

16.. நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்க வெற்றிலைச்சாறு உதவுகிறது.சைனஸ் பிரச்சினைக்கு வெற்றிலைச்சாறு தகுந்த நிவாரணம் அளிக்கக்கூடியது.

17.. வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

18.. வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.

19.· வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.

20.· வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.

21.· இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீ ஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.

22.· புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.

23.· வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 April 2024 11:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  2. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  3. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  4. வீடியோ
    😎SalmanKhan-உடன் இணையும் AR Murugadoss !சம்பவம் Loading🔥!#salmankhan...
  5. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  6. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  7. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  8. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  9. லைஃப்ஸ்டைல்
    இனிய காதல் மேற்கோள்கள்!
  10. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?