/* */

அரசு பணிக்கு ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு கட்டாயம்: தலைமை செயலாளர் உத்தரவு

இனி வரும் அரசு பணிகளுக்கு சேர விரும்புவோர் ஆபீஸ் ஆட்டோமேசன் எனப்படும் கணினி சான்றிதழ் படிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

அரசு பணிக்கு ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு கட்டாயம்: தலைமை செயலாளர் உத்தரவு
X

பைல் படம்

அரசு பணிக்கு ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு கட்டாயம்: தலைமை செயலாளர் உத்தரவு

இனி வரும் அரசு பணிகளுக்கு சேர விரும்புவோர் ஆபீஸ் ஆட்டோமேசன் எனப்படும் கணினி சான்றிதழ் படிப்பு கட்டாயமாக்கப்படுவதாக தற்போது தமிழக அரசின் தலைமை செயலரிடம் இருந்து அனைத்து துறை செயலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பட்டுள்ளது.

கணிணிமயமாகும் அரசுத் துறைகள்

தமிழக அரசின் அனைத்து துறைகளும் தற்போது கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் அரசு பணிகளுக்கு நியமனம் பெறுவோர் அனைவரும் கட்டாயமாக கணினியினை கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஆபீஸ் ஆட்டோமேசன் எனப்படும் கணினி சான்றிதழ் படிப்பினை அவசியமாக கற்க வேண்டும் என தமிழக அரசிற்கு டி.என்.பி.எஸ்.சி. பரிந்துரைத்தது.இதனை ஏற்று தற்போது அனைத்து அரசு பணிகளிலும் சேருவதற்கு ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபீஸ் ஆட்டோமேசன் படிப்பு

10ம் வகுப்பு தேர்ச்சி, தட்டச்சு தமிழ், ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது இளநிலை, தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு நிலையம், அரசு, அரசு உதவி பெரும், தனியார் பாலிடெக்னிக்களில் 120 மணி நேர பயிற்சி எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.உயர்நிலை பணிகள் மட்டுமில்லாது கீழ்நிலை பணிகளுக்கும் இந்த கணினி சான்றிதழ் படிப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பதவிகளுக்கு ஆட்டோமேசன் படிப்பு கட்டாயம்.?

டாக்டர்கள், பொறியாளர்கள், வனத் துறை உள்ளிட்ட அதிகாரி பதவிகள், உதவியாளர், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் டிரைவர் உள்ளிட்ட கீழ்நிலைப் பதவிகளுக்கும் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசு ஊழியர்கள் எண்ணிக்கை ஓர் பார்வை..

2011-ம் ஆண்டுக் கணக்கின்படி இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 1622.8 அரசு ஊழியர்கள் பணிசெய்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது குறைந்திருக்கக் கூடும். 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் 7681 பணியாளர்கள் சேவை செய்கின்றனர். மத்திய அரசுப் பணியாளர்களைப் பொறுத்தமட்டில் 2011-ம் ஆண்டு 24.63 லட்சம் பேர். மாநில அரசு ஊழியர்கள் 72.18 லட்சம் பேர். இந்த எண்ணிக்கையில் ரயில்வேயில் பணிபுரியும் 14 லட்சம் பேரும் அடங்குவர். அதாவது, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 125 மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள்.

தமிழகத்தில் தற்போது உள்ள தகவல்களில் படி மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 14 லட்சம் அல்லது அதற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது தமிழக மக்கள் தொகையில், ஒரு லட்சம் பேருக்கு 1,500 என்ற எண்ணிக்கையில் அரசு பணியாளர்கள் உள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மேற்காணும் பிரிவு ஊழியர்களுக்கு கணினி படிப்பு கட்டாயம் என தமிழக உத்தரவிட்டுள்ளது.



Updated On: 5 Oct 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?