/* */

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியிடங்கள்: தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.09.2023 மாலை 5. மணி வரை. அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது

HIGHLIGHTS

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியிடங்கள்: தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கீழ்கண்ட ஒப்பந்த பணியிடங்கள் காலியாக உள்ளன.

செவித்திறன் ஆய்வாளர் (Audiologist): புதுக்கோட்டை மாவட்ட இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை செவித்திறன் ஆய்வாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் Bachelor in Audiology and Speech language pathology / B.Sc., (Speech & Hearing) from RCI recognized institute தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.23,000- வழங்கப்படும்.

முடநீக்கியலாளர் (Physiotherapist): புதுக்கோட்டை மாவட்ட இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை முடநீக்கியளாலர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் Essential Bachelor Degree in Physiotherapist (B.P.T) முடித்திருக்க வேண்டும். மேலும், ஏதேனும் ஒரு மருத்துவமனையில் 2 ஆண்டுகள் பணியாற்றிய முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.13,000-வழங்கப்படும்.

பாதுகாவலர்கள் (CEmONC Security Guard): புதுக்கோட்டை மாவட்ட இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை பாதுகாவலர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மொத்த காலிப்பணியிடம் இரண்டு (2), இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.8,500- வழங்கப்படும்.

மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்பங்களை https://pudukkottai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம், புதுக்கோட்டை மாவட்டம் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.09.2023 மாலை 5.00 மணி வரை மட்டுமே. அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது மேலும், பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது எனவும், வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ தெரிவிக்கப்படுகிறது. அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும்மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Sep 2023 5:03 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!