/* */

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை திட்டங்களின் செயல்பாடு: ஆட்சியர் ஆய்வு

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள், விடுதிகளின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது

HIGHLIGHTS

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை  திட்டங்களின் செயல்பாடு: ஆட்சியர் ஆய்வு
X

புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட அளவில் 2022-23 ஆம் ஆண்டிற்கான முதலாவது காலாண்டு குழுக்கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் (27.04.2022) நடைபெற்றது.

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் நலக்குழு உறுப்பினர்களிடம் கோரிக்கை பெறப்பட்டது.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக 2022-23 ஆம் ஆண்டிற்கான முதலாவது காலாண்டு மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் சட்ட செயல்பாடுகள் குறித்தும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான தீருதவி மற்றும் புனர்வாழ்வு குறித்தும், உண்மைக்கு புறம்பான வழக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 April 2022 1:30 PM GMT

Related News