/* */

நாகாலாந்தில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொலை: திருச்சி எம்பி கண்டனம்

தமிழக வேலை வாய்ப்புகளில் தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது

HIGHLIGHTS

நாகாலாந்தில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொலை: திருச்சி எம்பி  கண்டனம்
X

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

நாகலாந்தில் தீவிரவாதிகள் என்று நினைத்து அப்பாவி பொதுமக்கள் 13 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் கண்டனத்துக்குரியது என்றார் திருச்சி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் .

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திருச்சி எம்பி சு. திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் மேலும் கூறியதாவது: சட்டமேதை அம்பேத்கர் வகுத்த சட்டத்தினால் தான் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தற்போது உயர் பதவிகளிலும் மக்கள் பிரதிநிதிகளாகவும் உள்ளனர். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கிடைப்பதற்காக அவர்கள் வகுத்துள்ள சட்ட விதிகளின்படி உட்கட்சித் தேர்தல் நடத்தப் படுகிறது.

தற்போது பல அரசியல் கட்சிகளில் உட்கட்சி தேர்தலை சம்பிரதாயத்திற்காகத்தான் நடத்துகின்றன. அதேபோல் தான் அதிமுகாவும் உட்கட்சி தேர்தலை நடத்துகிறது. தமிழகத்தில் தொடர்ந்து மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நிவாரணங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

மேலும் விவசாயிகளுக்கு அறிவித்த நிவாரணங்களை உடனடியாக தமிழக அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நாகாலாந்தில் தீவிரவாதிகள் என நினைத்து அப்பாவி பொது மக்கள் 13 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது கடும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசாக விளங்கும் மோடி அரசு எவ்வாறு ஆட்சி செய்து வருகிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. துப்பாக்கி சூட்டால் உயிரிழந்த குடும்பங்களுக்கு உரிய நிவாரணங்களை அரசு வழங்க வேண்டும்

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து தேசிய கீதம் ஆகியவை பாடப்படுவது என்பது வழக்கமான ஒன்று .பல அரசு விழாக்களில் இது நடைமுறையில் உள்ளது. ஆனால் சில விழாக்களில் இது பின்பற்றப்படவில்லை. எனவே அரசு இதில் கவனம் செலுத்தி பாரம்பரியத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக வேலை வாய்ப்புகளில் தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அரசு கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. இருப்பினும் ஆங்கிலத்தையும் புறக்கணிக்கக் கூடாது ஆங்கிலமும் நடைமுறைப்படுத்த வேண்டும் அவ்வாறு இருந்தால்தான் போட்டித் தேர்வுகளில் நம்முடைய மாணவர்களால் சமாளிக்க முடியும்

பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனைக்குரியது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து குற்றங்களை குறைக்க வேண்டும். அதே வேளையில் மாதா பிதா குரு தெய்வம் என்று அழைக்கப்படும் போது ஆசிரியர்கள் சமீபகாலமாக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவது என்பது மன்னிக்க முடியாத குற்றம். தமிழக அரசு இது போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சு. திருநாவுக்கரசர்.

Updated On: 6 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்