/* */

பேரறிவாளன் சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை - நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் சட்டத்துறை அமைச்சர் தகவல்.

புதுக்கோட்டை அரசுமருத்துவக்கல்லூரியில் ஆய்வு

HIGHLIGHTS

பேரறிவாளன் சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை    - நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் சட்டத்துறை அமைச்சர் தகவல்.
X

தமிழகசட்ட அமைச்சர் ரகுபதி இன்று புதுக்கோட்டை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ஆக்ஸிஜன் சேமிப்பு யூனிட்டினை பார்வையிட்டு மற்றும் கொரோன சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்து மருத்துவரிடம் கேட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்டஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி, உடனிருந்தார். பின்னர் சட்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இன்றைய தினம் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் 667 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொரோனா நோயாளிகளுக்கு நாளை வரை தேவையானஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது. கொரோன நோயாளிகளுக்கு தேவையானஆக்ஸிஜன் உடனடியாக வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைத்துவிடும்தனியார் மருத்துவமனைகளில் இருந்தும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் காரணமாக கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.

அதனால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. எனினும் கோவிட் நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும்விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே கொரோனா இரண்டாம் அலையில் இருந்துதங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். கொரோனா நோய் தொற்று உள்ளவர்களுக்கு 5 நாட்கள் வரை எவ்விதஅறிகுறியும் தெரிவதில்லை.

அதன் பிறகே அறிகுறிகள் தெரிகிறது.அதற்குள்ளாகவேஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டுகொரோனா தொற்று உறுதியானவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர வேண்டும். தாமதமாக சிகிச்சைக்கு வருபவர்களின் உயிரை பாதுகாப்பது சிரமமாக உள்ளது. எனினும் மருத்துவர்கள் நோயாளிகளை திறம்பட கையாண்டுவருகின்றனர்.

கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கை மற்றும் இதர நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையை தனித்தனியாக பிரித்து காட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கோவிட் சிகிச்சை பணிகளில் அரசு மருத்துவமனைகளில்பணிபுரிய விருப்பமுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தனியார் மருத்துவர்கள் பணி புரியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சில நாட்களாககோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறார்கள். கோவிட் நோய் தொற்றில் இருந்து பொதுமக்களைபாதுகாக்க தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருவதுடன், தேவையானநடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.அதேபோல் இந்த வருடம் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் நல்ல முடிவினை எடுப்பார்

அதேபோல் பேரறிவாளன் சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து அறிக்கை ஜனாதிபதி அவர்களிடம் உள்ளது அது குறித்து தமிழக முதல்வர் அனைத்து கட்சிகளிடம் பேசி சட்டரீதியான நடவடிக்கை எடுப்பார் இவ்வாறு சட்ட அமைச்சர்ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார்

இந்த ஆய்வின் போது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிமுதல்வர் பூவதி, வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் மற்றும்மற்றும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லபாண்டியன் ,கழக செயலாளர் நைனா முகமது,உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Updated On: 12 May 2021 4:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?