/* */

புதிய வழித்தடத்தில் பேருந்து துவக்கி வைத்து பயணம் செய்த அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைக்கேற்ப தேவைப்படும் இடங்களில் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது

HIGHLIGHTS

புதிய வழித்தடத்தில் பேருந்து துவக்கி வைத்து  பயணம் செய்த அமைச்சர் மெய்யநாதன்
X

புதிய வழித்தடத்தில் பேருந்தை தொடக்கி வைத்து பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் மெய்யநாதன்.

புதிய வழித்தடத்தில் பேருந்தை தொடக்கி வைத்து பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், திருநாளுர் வடக்கு பகுதியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிய பேருந்துவழித்தடத்தில் பேருந்தை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்து, வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தமிழக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தது, தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைக்கேற்ப தேவைப்படும் இடங்களில் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், திருநாளுர் வடக்கு பகுதியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து வழித்தடத்தில் காலை 05.00 மணிக்கு கந்தர்வக்கோட்டையிலிருந்து வாராப்பூர், ஆலங்குடி, மறமடக்கி, அறந்தாங்கி வழியாக சுப்பிரமணியபுரத்திற்கும், காலை 07.50 மணிக்கு சுப்பிரமணியபுரத்திலிருந்து அறந்தாங்கி, ஆவணத்தான்கோட்டை, மறமடக்கி, ஆலங்குடி வழியாக புதுக்கோட்டைக்கும்,.

காலை 10.21 மணிக்கு புதுக்கோட்டையிலிருந்து சுப்பிரமணியபுரத்திற்கும், மதியம் 12.45 மணிக்கு சுப்பிரமணியபுரத்திலிருந்து ஆலங்குடிக்கும், மதியம் 02.40 மணிக்கு ஆலங்குடியிலிருந்து பேராவூரணிக்கும், மாலை 05.00 மணிக்கு பேராவூரணியிலிருந்து புதுக்கோட்டைக்கும், இரவு 08.20 மணிக்கு புதுக்கோட்டையிலிருந்து கந்தர்வக்கோட்டைக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் இதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

இதில், புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் இளங்கோவன், ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் சுமதி மெய்யநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரிதா மேகராஜ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், துணை மேலாளர்(வணிகம்) சுப்பு மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Updated On: 8 Jan 2022 2:04 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  5. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  7. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  9. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  10. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை