/* */

பள்ளிசெல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் 3 பேர் உடனடியாக எல்.என்.புரம் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

HIGHLIGHTS

பள்ளிசெல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள்  கணக்கெடுப்பு பணி
X

திருவரங்குளம் பகுதியில்  பள்ளிசெல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்டகுழந்தைகள்  கணக்கெடுப்பு பணி ஈடுபட்ட அதிகாரிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு உத்தரவிற்கிணங்க, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி வழிகாட்டுதல் படி திருவரங்குளம் வட்டார வளமையத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் 6 முதல் 18 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கணக்கெடுப்பு பணியானது ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இக்கணக்கெடுப்பு பணியில் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் ,சிறப்பாசிரியர்கள்,மற்றும் இணைப்பு பள்ளி மைய தன்னார்வ ஆசிரியர்கள் ஆகியோர்கள் ஒருங்கிணைந்து குடியிருப்பு வாரியாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள்,செங்கல் சூளைகள்,குவாரிகள் ,கரும்புத் தோட்டங்கள் போன்ற இடங்களிலும் ,பள்ளிகளிலும் மற்றும் ஒவ்வொரு வீடுகளிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 25 அன்று எல்.என்.புரம் பஞ்சாயத்திற்குட்பட்ட சுக்கிரன்குண்டு குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் சுக்கிரன்குண்டு குடியிருப்பு பகுதியில் 8 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டனர். அதில் 3 மாணவர்கள் உடனடியாக அரசு மேல்நிலைப்பள்ளி எல்.என்.புரம் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

இக்கள ஆய்வினை வட்டாரக் கல்வி அலுவலர் புவனேஸ்வரி மலர் விழி, திருவரங்குளம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வராசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாறன்,ஒன்றிய கவுன்சிலர் முருகேசன்,காசிம் புதுப்பேட்டை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பசீர் அலி,எல்.என்.புரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஸ்வநாதன் மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணம்மாள்,வென்சி ரொசாரியோ, ஆசிரியர் பயிற்றுநர்கள் மணி,சிவராஜ்,ஸ்டாலின் இயன்முறை மருத்துவர் செந்தில் செல்வன் ஆகியோர் மேற்கொண்டனர்.


Updated On: 26 Aug 2021 1:33 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!