/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆ. இராசா பாராட்டு

பெரம்பலூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற தி.மு.க.வினருக்கு முன்னாள் மத்திய மந்திரி ஆ. இராசா பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆ. இராசா பாராட்டு
X

தி.மு.க.வினருக்கு நடந்த பாராட்டு விழாவில் ஆ. ராசா எம்.பி. பேசினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு கூட்டம், மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலையில், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா. எம்.பி., பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு, பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு ஆகிய 4- பேரூராட்சிகளிலும் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்களுக்கு பாராட்டி சிறப்புரையாற்றினார்கள்.

இந்த கூட்டத்தில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா. எம்.பி.பேசியாதாவது:-

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வெற்றியானது கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையிலும் தி.மு.க.வின் கோட்டை என்று நிரூபிக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை தேசிய தலைவராக உயர்த்தியுள்ளது . பெரம்பலூர் மாவட்டத்திற்கு அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை விரைவில் கொண்டு வரப்படும், பெரம்பலூர் மக்களுக்கு தினந்தோறும் காவிரி குடிநீர் வழங்கப்படும். இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்களையும், தொண்டர்களையும் மதிக்க வேண்டும், தோல்வியடைந்தவர்களை கட்சி கை விடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், கழக சட்டத்திருத்த குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க.கண்ணன், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.ந.அ.பெருநற்கிள்ளி, முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார்,தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ந.ஜெகதீஸ்வரன்,மாவட்ட துணை செயலாளர்கள் நூருல்ஹிதா இஸ்மாயில், தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.அண்ணாதுரை, எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், பேரூர் கழகசெயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன்,பி.சேகர், ஏ.எஸ்.ஜாஹிர்உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Feb 2022 4:42 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!