/* */

பெரம்பலூர் ஊர்க்காவல் படை தேர்வு: மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படை பணி தேர்வுக்கு மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

பெரம்பலூர் ஊர்க்காவல் படை தேர்வு: மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம்
X

பைல் படம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படை பணி தேர்வுக்கு மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். மணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு மூன்றாம் பாலினத்தார்கள் மூன்று (3) காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 25.02.2022 மற்றும் 28.02.2022 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் (ரேணுகா சில்க்ஸ் எதிரில்) வழங்கப்படும். ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவோ அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களாகவோ இருக்கலாம். உடல் ஆரோக்கியமாகவும், தேர்வு நடைபெறும் நாட்களில் 20 வயது நிரம்பியவராகவும் 45 வயது நிறைவு அடையாதவராகவும் இருக்கவேண்டும்.

விண்ணப்பங்கள் பெற வரும்போது கல்வி சான்றிதழ், ஆதார் கார்டு அசல், ரேஷன் கார்டு மற்றும் டி.ஜி. கார்டு இவற்றின் நகல்கள் எழுத்து வரவேண்டும். அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் இரண்டு எடுத்து வரவேண்டும். மேலும், இந்திய குடிமகனாக இருக்கவேண்டும். உடல் தகுதி உள்ளவராக இருக்கவேண்டும். எந்தவித அரசியல் கட்சியில் தொடர்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.

இப்பணிக்கு மாத ஊதியம் இல்லை. ஆனால் பணி நாட்களுக்குரிய தொகுப்பூதியம் உண்டு. இப்பணிக்கு சேர விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். தேர்வு நாள் அன்று எவ்வித பயணப்படியும் வழங்கப்பட மாட்டாது. தேர்வு பெற்றவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படைப் பயிற்சி வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி தெரிவித்துள்ளார்.


Updated On: 22 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  7. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  8. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  9. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு