/* */

பெரம்பலூர் சிவன் கோவில்களில் பக்தர்கள் ஆனி பிரதோஷ வழிபாடு

பெரம்பலூர் சிவன் கோவில்களில் பக்தர்கள் ஆனி பிரதோஷ வழிபாடு செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் சிவன் கோவில்களில் பக்தர்கள் ஆனி பிரதோஷ வழிபாடு
X

சிறப்பு அலங்காரத்தில் சிவலிங்கம்.

சனி பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நந்தியம் பெருமானுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சனி பிரதோஷத்தில் நந்தீஸ்வரரை வழிபட்டால் நல்லது நடக்கும் என்ற ஐதீகத்தால், சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இதில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திகேஸ்வரருக்கு நேற்று மாலை பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவர், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாலந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் சனி பிரதோஷத்தையொட்டி பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடந்தது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தியம் பெருமானை வழிபட்டனர். ஆனி மாத 2-வது பிரதோஷமும் வருகிற 15-ந்தேதி சனிக்கிழமையில் தான் வருகிறது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 July 2023 4:46 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்