/* */

பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்த வளர்ச்சி திட்ட பணிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்த வளர்ச்சி திட்ட பணிகள்
X

பெரம்பலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ரூ.22.46 கோடி மதிப்பிலான பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்புலியூர் சிலோன் காலனி அருகில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.49.21 லட்சம் மதிப்பீட்டில் கீழப்புலியூர் சிலோன் காலனி முதல் சிறுகுடல் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும், நமையூர் கிழக்கு தெரு, முருக்கன்குடி பேருந்து நிலையம் அருகில் (பொன்னகரம் காலனி தெரு) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.22.30 லட்சம் மதிப்பீட்டில் சிறுமத்தூர் முன்னுரிமை பணிகளையும், நோவா நகர் பகுதியில் ஆதிதிராவிடர் நல குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.12.20 லட்சம் மதிப்பீட்டில் திருமாந்துறை நோவா நகரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும், பென்னகோணம் வடக்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் பென்னக்கோணம் தேரோடும் வீதியில் (வடக்கு வீதி) தார்சாலை அமைக்கும் பணியினையும், நன்னை பேருந்து நிலையத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.24.90 லட்சம் மதிப்பீட்டில் நன்னை கிளியூர் தார்சாலையை அமைக்கும் பணியினையும், மாநில அரசு நிதித்திட்டத்தின் மூலம் ரூ.6.54 கோடி மதிப்பீட்டில் நன்னை முதல் பரவாய் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும், கோவிந்தராஜபட்டிணம் ஆற்றுக்கு செல்லும் பாதையில் நபார்டு – 28 திட்டத்தின் மூலம் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் கோவிந்தராஜபட்டிணம் முதல் கைப்பெரம்பலூர் வரை ஆற்றுப்பாலம் அமைக்கும் பணியினையும், வீரமநல்லூர் ஏரிக்கரை அருகில் மாநில அரசு நிதித்திட்டத்தின் மூலம் ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் வீரமநல்லூர் முதல் குழுமூர் வரை சாலை மேம்படுத்துதல் பணியினையும், கீழப்பெரம்பலூர் பிள்ளையார் கோவில் தெருவில் மாநில அரசு நிதித்திட்டத்தின் மூலம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டில் கீழப்பெரம்பலூர் முதல் கோழியூர் வரை சாலை அமைக்கும் பணியினையும்,கீழப்பெரம்பலூர் பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.61.00 லட்சம் மதிப்பீட்டில் கீழப்பெரம்பலூர் ஜெய்குமார் கடை முதல் ஆதிதிராவிடர் காலனி செல்லும் வரை சாலை அமைக்கும் பணியினையும், அகரம் சீகூர் – அரியலூர் ரோடு பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் ரூ.21.20 லட்சம் மதிப்பீட்டில் அகரம்சீகூர் மேல்நிலைநீர்தேக்கதொட்டி அமைக்கும் பணியினையும் என மொத்தம் 22.46 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து, பணிகளை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்னதாக விரைந்து முடிக்க வேண்டும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திருமதி முத்தமிழ்செல்வி மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், பிரேமலதா ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், கீழ பெரம்பலூர் சத்யா காமராஜ், நன்னை சின்னு, அகரம்சீகூர் முத்தமிழ் செல்வன் துணை தலைவர் இந்துமதி தர்மராஜ் ஒன்றிய கவுன்சிலர் பெரு கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jun 2023 5:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்