/* */

பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

பெரம்பலூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது
X

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் தலைமையில் பெரம்பலூர் காவல்துறையினர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பெரம்பலூர் நகரில் விற்பனை செய்யப்படுகின்றதா என சிறப்பு ரோந்து மேற்கொண்டனர்.

இந்நிலையில் பெரம்பலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியன் தனக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி காவலர்களுடன் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே சென்று பார்த்தபோது ஒரு நபர் வெள்ளை தாளில் வரிசையாக எண்களை எழுதி வைத்துக்கொண்டிருந்தவரை விசாரிக்க, அவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டார்.

இதனையொட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த தர்மராஜ் (33) என்பவரை கைது செய்தார். அவரிடமிருந்து லாட்டரி விற்ற பணம் ரூபாய் 9300/- பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 30 Sep 2021 3:33 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா