/* */

இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர அமைப்பு ஓட்டம் செப் 18ம் தேதி : கலெக்டர் அழைப்பு

பெரம்பலூரில் சுதந்திர அமைப்பு ஓட்டம் நிகழ்ச்சி செப். 18ம் தேதி நடக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர அமைப்பு ஓட்டம் செப் 18ம் தேதி : கலெக்டர் அழைப்பு
X

பைல் படம்

இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், நேரு யுவகேந்திரா மற்றும் மாவட்ட இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுதுதறை இணைந்து இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டம் (Fit India Freedom Run 2.0) என்ற நிகழ்வை 13.08.2021 முதல் 02.10.2021 வரை நடைபெற்றுவருகின்றது.

இந்நிகழ்வானது வயது வித்தியாசமின்றி அனைத்து வயதுடைய பங்கேற்பாளர்களும் பங்குபெறும் வகையில் 18.09.2021 அன்று காலை 7.00 மணி அளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் உள்ள பூங்காவில் இருந்து தொடங்கவுள்ளது.

சமூக இடைவெளியினை பின்பற்றி அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி இந்த ஓட்டம் நடத்தப்படவுள்ளது.

இதன்மூலம் அனைத்து மக்களும் தினமும் 30 நிமிட உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்கிட தங்கள் வாழ்வில் தீர்மானம் மேற்கொள்ளலாம்.

மேலும் சமூக இடைவெளியினை பின்பற்றும்போதும் உடற்பகுதியின் அவசித்தேவையினை உணர்ந்து நம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க இயலும்.

சோம்பல், மனஅழுத்தம், கவலை, நோய்கள் முதலியவற்றிலிருந்து விடுபடுவதற்கும் உடல் தகுதியினை மேம்படுத்தவும், உடற்பயிற்சியினை பிரபலப்படுத்தவும் ஆரோக்கியமான மற்றும் பொருத்தமான வாழ்க்கை முறையினை பின்பற்றவும் இயலும்.

இதுகுறித்த மேலும், விவரங்களுக்கு நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலரை 7736811030 என்ற கைபேசி எண்ணிலும்,

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703516 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்தார்.

Updated On: 27 Aug 2021 3:06 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?