Begin typing your search above and press return to search.
குன்னம்-கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை அமைச்சர் துவக்கி வைத்தார்.
குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை அமைச்சர் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS

குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்காக தமிழகம் முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 193 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா முன்னிலையில் தமிழக பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.