/* */

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தீயணைப்பு துறை விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

HIGHLIGHTS

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தீயணைப்பு துறை விழிப்புணர்வு பேரணி
X
பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் விதமாக இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நவம்பர் 1ஆம் தேதியான இன்று நடைபெற்றது,

பெரம்பலூர் அடுத்துள்ள துறை மங்கலத்தில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணி பாலக்கரை, வெங்கடேசபுரம், பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் தீயணைப்பு நிலையத்திலே முடிவுற்றது.

இப்பேரணியில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் விதமாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு சென்றனர்.

மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா வழங்கினர்.

இந்நிகழ்வில் தீயணைப்புநிலைய அலுவலர் உதயகுமார் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!