/* */

உதகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

போலீசாரால் தாக்கப்பட்ட நபர் குடும்பத்திற்கு இழப்பீடு தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

உதகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். 

நீலகிரி மாவட்டம் உதகை, மேல் தலையாட்டுமந்து பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்பவரை, காந்தல் காவல் நிலைய போலீசார், ஒரு வழக்கு சம்பந்தமாக விசாரிக்க அழைத்து சென்றுள்ளனர். அங்கு அடித்து உதைத்தாக கூறப்படுகிறது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேசை, அரசு மருத்துவமனையில் அரசு செலவில் அனுமதித்து உயர்தர சிகிச்சை அளித்து பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஊட்டி தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளியான சுரேசின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சுரேசின் 2 பெண் குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். சுரேசின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஜெயசுதா மற்றும் அவரது குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் செயற்குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 March 2022 1:30 PM GMT

Related News