/* */

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: அக்., 1 க்கு ஒத்திவைப்பு

கோடநாடு வழக்கில் சயான் வாளையார் மனோஜ் ஆஜரான நிலையில், இவ்வழக்கை அக் 1 க்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவு.

HIGHLIGHTS

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: அக்., 1 க்கு ஒத்திவைப்பு
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

வாளையாறு மனோஜூக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளை சிறையில் உள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர்.

வழக்கு கடந்த மாதம் 27-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, இன்று ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆஜராகியிருந்தனர். பிற 8 குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராகவில்லை. அரசு தரப்பில் சிறப்பு வழக்கிறஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆஜராகினர்.

சாட்சிகள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆனந்தகிருஷ்ணன், சந்தோஷ்குமார், சுரேஷ்குமார் ஆஜராகினர். விசாரணை ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இன்றைய விசாரணைக்கு கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடராஜன் ஆஜராகவில்லை. அவருக்கு போலீஸார் சம்மன் வழங்கவில்லை என தெரிகிறது.

விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர்கள் மேல் விசாரணைக்கு அவகாசம் தேவை என வலியுறுத்தினார். அதன் பேரில், நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கு விசாணையை அக்டோபர் மாதம் 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கூறும் போது, ‛அரசு தரப்பில் இவ்வழக்கில் புலன் விசாரணை கோரி ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மேல் புலன் விசாரணையும் தேவைப்படுவதால் கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று நீதிபதி சஞ்சய் பாபா அக்டோபர் 1-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். கோடநாடு எஸ்டேட்டில் ஒரு காவலாளி தாக்கப்பட்டுள்ளார். ஒரு காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் சந்தேக மரணமடைந்துள்ளார்.

ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இவை தனித்தனி நிகழ்ச்சிகளாக இருந்தாலும், ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது என்பதால் மேல் புலன் விசாரணை தேவைப்படுகிறது. இந்த வழக்கில் ஒரு சில விஷயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக மனு தாக்கல் செயய்யப்பட்டுள்ளதால், இவ்வழக்கு தொடர்பாக தேவைப்டடால் யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். கூடுதல் விசாரணையில் கால தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டாலும், இவ்வழக்கு தொடர்பாக முழு விவரங்களையும் வெளியே கொண்டு வர வேண்டும் என்பது அரசின் நோக்கம்' என்றார்.

வழக்கறிஞர் கே.விஜயன் கூறும் போது, 'சயானுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போல இது வரை வழக்கறிஞர் இல்லாமல் இருந்த வாளையாறு மனோஜூக்கு இலவச சட்ட உதவி மையம் மூலம் வழக்கறிஞர் முனிரத்னம் நியமிக்கப்ப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக கோடநாடு எஸ்டேட் பங்குதாரர் சசிகலா, முன்னாள் முதல்வர், சஜீவன் உட்பட 10 பேரை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விரைவில் விசாரணைக்கு வருவதாக தெரிவித்தோம்' என்றார்.

இந்நிலையில் கோடநாடு வழக்கு விசாரணை கூடுதல் காவல் கண்கணிப்பாளர் ( adsp ) தலமையில் குழு அமைத்து கோடநாடு வழக்கு புலன் விசாரணை சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் தெரிவித்தார்.

Updated On: 2 Sep 2021 7:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?