/* */

உதகை நகராட்சியில் கவுன்சிலர்கள் பதவியேற்பு

நீலகிரி மாவட்டம் முழுவதும் 294 பேர் இன்று வார்டு கவுன்சிலர்களாக அந்தந்த பகுதியில் பதவியை ஏற்றுக்கொண்டனர்

HIGHLIGHTS

உதகை நகராட்சியில் கவுன்சிலர்கள் பதவியேற்பு
X

உதகையில் கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

நீலகிரி மாவட்டத்தில் உதகை குன்னூர் கூடலூர் நெல்லியாளம் உள்ளிட்ட நான்கு நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். இவ்விழா நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.

உதகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 20 திமுக கவுன்சிலர்கள் 6 காங்கிரஸ், ஏழு அதிமுக கவுன்சிலர்கள், மீதமுள்ள சுயேச்சை கவுன்சிலர்கள் என 36 பேரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். நகராட்சி ஆணையர் காந்திராஜ் தலைமையில் பதவியை ஏற்றுக்கொண்டனர்.

நகராட்சி ஆணையர், புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட வார்டு கவுன்சிலர்களுக்கு பூங்கொத்து வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார். இதேபோல் கூடலூர் நகராட்சி மற்றும் நெல்லியாளம் நகராட்சி களில் பொறுப்பு வகிக்கும் ஆணையாளர்கள் தலைமையில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் 294 பேர் இன்று வார்டு கவுன்சிலர்களாக அந்தந்த பகுதியில் பதவியை ஏற்றுக் கொண்டனர்.

Updated On: 2 March 2022 11:30 AM GMT

Related News