/* */

ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கியது: உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்

4 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலை ரயில் சேவை இன்று தொடங்கியதையடுத்து உற்சாகமாக பயணித்த சுற்றுலா பயணிகள்

HIGHLIGHTS

ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கியது: உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்
X

ஊட்டி மலை ரயில் 

நீலகிரி, கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனையொட்டி கடந்த சில தினங்களாகவே 2 மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

கடந்த 3ம் தேதி இரவு நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் செல்லும் பாதையில், 5 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.

இதுதவிர பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு, தண்டவாளம் தெரியாத அளவுக்கு மூடியபடி இருந்தது.

தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தது.

கடந்த 2 நாட்களாக ஓரளவு மழை குறைந்திருந்ததால் சீரமைப்பு பணிகள் வேகம் எடுத்தன. ஊழியர்கள் ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண் திட்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக கடந்த 4ம் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

இதனால் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல வந்து, ரெயிலில் பயணிக்க விரும்பிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நேற்றுடன் தண்டவாளத்தில் நடந்து வந்த சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்தது. இதனை தொடர்ந்து இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கியது.

அதன்படி இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டது.

ரயிலில் 186 சுற்றுலா பயணிகள் பயணித்தனர். அவர்கள் ரயிலில் பயணித்தபடி, வனத்தின் இயற்கை அழகினை ரசித்தபடி பயணித்தனர். 4 நாட்களுக்கு பிறகு மலை ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 8 Dec 2023 3:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  2. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  3. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  4. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  6. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...
  7. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  8. வீடியோ
    இந்திய தேர்தலைக் காண வந்துள்ள உலகளாவிய பிரதிநிதிகள் குழு...
  9. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  10. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!