/* */

நீலகிரியில் படுகரின மக்கள் "உப்பு ஹட்டுவே" பண்டிகை கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் உப்பு ஹட்டுவ பண்டிகையை 400 கிராமங்களில் சிறப்பாக கொண்டாடினர்.

HIGHLIGHTS

நீலகிரியில் படுகரின மக்கள்  உப்பு ஹட்டுவே பண்டிகை கொண்டாட்டம்
X

 உப்பு ஹட்டுவ' பண்டிகை சிறப்பாக கொண்டாடிய படுகர் இன மக்கள்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடைகம்பட்டி, ஜக்கலோடை, திம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் படுகர் இன மக்களின் 'உப்பு ஹட்டுவ' பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி காலை அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த உப்பு, பச்சை கடலை, புல் ஆகியவற்றை ஆற்றில் கரைத்து கிடைத்த தண்ணீரை மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனர்.

இதையடுத்து அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு, காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இலை, நெறி செடிகளை, வீட்டுக்கு கொண்டு வந்து முற்றத்தில் கட்டி தொங்கவிட்டனர். இதன் மூலம் நோய், நொடிகள் வராமல் இருக்கும் என்பது ஐதீகம்.

மேலும் உப்பு தண்ணீர் குடிப்பதால் மாடுகள் காலை முதல் மாலை வரை மேய்ச்சலுக்கு எங்கு சென்றாலும் வீட்டுக்கு வந்து விடும் என்று நம்பிக்கை நிலவுகிறது.

பின்னர் வீட்டில் பாயாசம் தயாரித்து தங்கள் ஊரில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் படுகர் இன மக்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவதுடன், அதன் மூலம் வறட்சி நீங்கி மழை பொழிந்து ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்படுகிறது.

Updated On: 8 March 2022 9:55 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!