/* */

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மருத்துவ முகாம்

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மருத்துவ முகாம்
X

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்ப சத்திரம் பகுதியில்,  இராணுவம் சார்பில் அப்பகுதி பொதுமக்களுக்கு, மருத்துவ முகாம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில், கடந்த 8ந் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. அதில் பயணம் செய்த முப்படைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர். அச்சமயத்தில் மீட்புபணியில் உடனிருந்த அப்பகுதி மக்களுக்கு மெட்ராஸ் ரிஜிமென்டல் மையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இன்று, மெட்ராஸ் ரிஜிமென்டல் மையத்தின் சார்பில் மருத்துவ முகாமினை வெலிங்டன் ராணுவ மையத்தின் காமண்டென்ட் இராஜேஸ்வர்சிங் துவக்கி வைத்தார். அப்பகுதி மக்களின் உடல்நிலை பரிசோதனை, சாக்கரைநோய், ரத்த கொதிப்பு, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு, எம்.ஆர்.சி. ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கேப்டன் சரவணக்குமார், மேஜர் வித்யா, வண்டிச்சோலை பஞ்சாயத்து தலைவர் மஞ்சுளா சதிஷ்குமார் (அதிமுக) உட்பட அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Dec 2021 8:57 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!