/* */

கூடலூரில் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை கண்டித்து போராட்டம்

நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுநாள் வரையில் சங்கத்தில் செலுத்திவரும்சேமிப்புத் தொகையை திரும்ப தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

கூடலூரில் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை கண்டித்து போராட்டம்
X

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள செறு முள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகள் மற்றும் ஊழலை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சமீப காலமாக இங்குள்ள கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதும் பயிர் கடன் வழங்குவதில் செயலாளர் தலைவர் மேல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டுமென கூறி லஞ்சம் பெறுவது சம்பந்தமாக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் சில நிர்வாக இயக்குனர்கள் முறைகேடுகளை கண்டித்து கூட்டத்தை விட்டு வெளியேறினார்கள்.

இதையடுத்து லஞ்சம் மற்றும் முறைகேடுகளை கண்டித்து நிர்வாக குழு உறுப்பினர்கள் அழைக்காமல் தலைவர் மற்றும் செயலாளர் தங்களுக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் ரகசியமாக அழைத்து கூட்டம் நடத்துவதும் அவர்களின் வீடுகளுக்குச் சென்று கையெழுத்து வாங்குவதை கண்டித்து ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

எனவே சங்க உறுப்பினர்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை தற்போது உண்ணாவிரதப் போராட்டம் மூலம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து வரும் நிலையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுநாள்வரையில் சங்கத்தில் செலுத்திவரும் சேமிப்புத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நிர்வாகக்குழு இயக்குனர்கள் சந்திரன், ஸ்ரீநிவாசன், கீதா சசிதரன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கங்காதரன் தேவர்சோலை பேரூராட்சி கவுன்சிலர் ஜோஸ், ஆறாவது வார்டு கவுன்சிலர் முகேஷ் , ஏழாவது வார்டு கவுன்சிலர் நாசர், 11வது வார்டு கவுன்சிலர் ஹனிபா, புலவர் உற்பத்தியாளர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், மகளிர் சுய உதவிக்குழு மஞ்சுளா மணிகண்டன், ஆகியோரும் மேலும் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Updated On: 15 March 2022 7:59 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!