/* */

வேதாரண்யம் அரசு உதவிபெறும் பள்ளியில் நடனமாடி கல்வி கற்பிக்கும் ஆசிரியை

வேதாரண்யம் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியை நடனமாடி கல்வி கற்பித்து வருகிறார்.

HIGHLIGHTS

வேதாரண்யம் அரசு உதவிபெறும் பள்ளியில்  நடனமாடி கல்வி கற்பிக்கும் ஆசிரியை
X

வேதாரண்யம் அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை மாணவர்களுக்கு நடனமாடி கல்வி கற்று கொடுத்து வருகிறார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம்புலத்தை சேர்ந்தவர் ஆசிரியை வசந்தா சித்திரவேல். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். இவர் வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு சுந்தர விலாஸ் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். தனது பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவர்கள் கடந்த 20 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வருகின்றனர்.

அவர்களுக்கு பாடங்களை இலகுவான முறையில் கற்பிப்பதற்காக ஆடல் பாடல் மற்றும் நடன பயிற்சியின் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றார், தனது வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வாய்ப்பாட்டை யோகா முறையில் கற்பித்து வருகிறார். மாணவ மாணவிகளும் யோகாவுடன் கற்பித்தலை இலகுவாக புரிந்து கொண்டு பாடங்களையும் கற்று மனதை ஒரு நிலைப்படுத்தி கற்றுக் கொள்கின்றனர்.

அதுபோல் வசந்தா சித்திரவேலு மாலை நேரத்தில் மாணவ மாணவிகளுடன் விளையாட்டு மைதானத்தில் அவர்களின் மனநிலையை ஒருநிலை படுத்துவதற்கும் மூளையை பக்குவப் படுத்தும் விதமாக நடன முறையில் பாடல்களை கற்றுக்கொடுத்து மாணவ மாணவிகளை மகிழ்ச்சியில் திளைக்க வைத்து வருகிறார்.

Updated On: 14 Dec 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...