தென்னை ஈக்களை அழிக்க வேளாண்மைத்துறை நேரடி விளக்கம்

தென்னை ஈக்களை அழிக்க நாகை வேளாண்மை அதிகாரிகள் விவசாயிகளுக்கு நேரடி விளக்கம் அளித்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தென்னை ஈக்களை அழிக்க வேளாண்மைத்துறை நேரடி விளக்கம்
X

வேளாண்மைத்துறை அதிகாரிகள் தென்னை ஈக்களை அளிப்பது குறித்து நேரடி விளக்கம் தந்தனர்.

வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு சுற்றுவட்டாரங்களில் தென்னையை பாதிக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமையில் செயல் விளக்கம் மற்றும் கலந்தாய்வு நடைபெற்றது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரங்களில் வானவன்மகாதேவி, நாலுவேதபதி, வெள்ளப்பள்ளம், பெரிய குத்தகை, செட்டிபுலம், கரியாப்பட்டினம், அண்ணா பேட்டை, வண்டுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,000 ஹெக்டர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த பகுதிகளில் தென்னையை பாதிக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் பரவி வருகின்றன. இதனை எப்படி கட்டுப்படுத்துவது என தென்னை விவசாயம் செய்துள்ள விவசாயிகள் இடத்தில் நேரடியாக அந்தந்த ஊர்களுக்கு சென்று தென்னை பயிரிட்டுள்ள பயிரிட்டுள்ள தோட்டத்திலேயே ஆய்வு செய்யப்பட்டது. அந்த ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி என இணை இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிகாரிகள் விவசாயிகளிடத்தில் விளக்கம் அளித்தனர்.

அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கூறி,விவசாயிகள் பயன்படுத்தி வேளாண்மை துறையினர் கூறும் வழிமுறைகளை பின்பற்றும்படி வேளாண்மைத் துறை இணை இயக்குனர் பன்னீர்செல்வம், வேளாண்மை பூச்சியியல் வல்லுநர் சந்திரசேகர், மேலாண்மை தென்னை ஆராய்ச்சி நிலையம் மதி ராஜன் ஆகியோர் கூறினர். ஏராளமான தென்னை விவசாயிகள் பயன் பெற்றனர்.

Updated On: 20 April 2021 6:56 AM GMT

Related News