/* */

நாகப்பட்டினத்தில் நிவாரண நிதி, மளிகை பொருட்கள் வழங்கும் பணி: கலெக்டர் துவக்கிவைத்தார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணியை கலெக்டர் பிரவின் நாயர் தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

நாகப்பட்டினத்தில் நிவாரண நிதி, மளிகை பொருட்கள் வழங்கும் பணி: கலெக்டர் துவக்கிவைத்தார்
X

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணியை கலெக்டர் பரவின் நாயர் தொடங்கிவைத்தார்.

நாகை மாவட்டத்தில் 2 லட்சத்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று 2000 ரூபாய், மற்றும் சிறப்பு நிவாரண மளிகை தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் வழங்கி தொடங்கி வைத்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிவாரண நிதி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து முதற்கட்ட தவணை தொகை கடந்த மாதம் வழங்கப்பட்டது. இந்நிலையில், நாகை நீலா சன்னதி நியாயவிலை கடையில், இன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணை 2000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பினை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் ஆகியோர் வழங்கினார். மாவட்டம் முழுவதும் 95% டோக்கன் வழங்கும் பணி முடிவுற்று, நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள 356 நியாயவிலை கடைகளில் 2 லட்சத்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட இருப்பதாக நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் கூறினார்.

Updated On: 15 Jun 2021 7:31 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  3. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  6. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  8. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்