/* */

நாகை- திருச்சி ரயில் சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துவக்கம்

நாகை-திருச்சி பயணிகள் சிறப்பு விரைவு ரயில் சேவை 2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இன்று தொடங்கியது.

HIGHLIGHTS

நாகை- திருச்சி ரயில் சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துவக்கம்
X

நாகை திருச்சி சிறப்பு ரயில் சேவை இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இன்று தொடங்கியது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருச்சியில் இருந்து நாகப்பட்டினம் வரை தினசரி இயங்கி வந்த பயணிகள் ரயில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதைத் தொடர்ந்து இன்று முதல் திருச்சியிலிருந்து நாகைக்கு பயணிகள் ரயில் மீண்டும் தொடங்க தென்னக ரயில்வே துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி நாகையில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயிலை சிறப்பு விரைவு ரயில் ஆக மாற்றி அமைக்கப்பட்டு அதன் சேவை இன்று முதல் துவங்கப்பட்டது.

687 நாட்களுக்கு பின் நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சி சென்ற ரயிலுக்கு நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, நாகையில் இருந்து திருச்சிக்கு விரைவு ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி அவர்கள் தங்களது மகிழ்ச்சியை அனைவருடன் பகிர்ந்து கொண்டனர்.

Updated On: 11 Feb 2022 6:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா