/* */

நாகை: வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாகை மாவட்டத்தில் மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் அருண் தம்பு ராஜ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாகை: வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
X
நாகை மாவட்டத்தில் மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் அருண் தம்பு ராஜ் தொடங்கி வைத்தார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நாகை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

நாகை கடற்கரை சாலையிலிருந்து கடலுக்கு செல்லும் மழைநீர் வடிகால்கள் மற்றும் வாய்க்கால்களை பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் கூறிய ஆட்சியர் அருண் தம்புராஜ், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே நகராட்சி ஊராட்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வடிகால் வாய்க்கால்கள் இன்றைய தினத்திலிருந்து வரும் 25-ஆம் தேதி வரை 5 தினங்களுக்குள் தூர்வாரும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வார நகராட்சி, ஊராட்சி,பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளதாகவும் கூறினார்..

Updated On: 21 Sep 2021 5:21 AM GMT

Related News