/* */

நாகையில் நகராட்சி தேர்தல் 16 வது வார்டில் வென்ற சுயேட்சை திமுகவில் இணைந்தார்

16 ஆவது வார்டில் போட்டியின்றி வென்ற நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த வேட்பாளர் சுரேஷ் திமுகவில் இணைந்துகொண்டார 

HIGHLIGHTS

நாகையில் நகராட்சி தேர்தல் 16 வது வார்டில் வென்ற சுயேட்சை  திமுகவில் இணைந்தார்
X

நாகை நகராட்சி 16 வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் மீனவர் அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

நாகை நகராட்சி 16 வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் மீனவர் அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

நாகை நகராட்சியில் உள்ள 16 ஆவது வார்டில் திமுக - அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் 16 ஆவது வார்டில் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கிராம மக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றி சான்றிதழை வழங்கிய நிலையில், சுயேட்சை வார்டு உறுப்பினராக அறிவிக்கப்பட்ட சுரேஷ் இன்று திமுகவில் இணைந்துகொண்டார். நாகை மாவட்ட திமுக அலுவலகத்தில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தலைமையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் முன்னிலையில் சுயேட்சை வார்டு உறுப்பினர் சுரேஷ் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த வார்டு உறுப்பினர் சுரேசை திமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதன் காரணமாக நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 16 ஆவது வார்டை திமுக கைப்பற்றி வெற்றியை உறுதி செய்துள்ளது.


Updated On: 10 Feb 2022 5:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  3. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  4. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  5. வீடியோ
    முதல் நாளே இவ்ளோ வசூலா ? வாரி குவித்த Billa Re-Release !#ajith...
  6. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  7. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  8. ஆன்மீகம்
    மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்