/* */

Foreign Drinks Bottle Seized 2 நாட்களில் 1010 வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல் :போலீசார் அதிரடி

Foreign Drinks Bottle Seized நாகப்பட்டினத்தில் கடந்த இரண்டு காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் 1010 வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

Foreign Drinks Bottle Seized  2 நாட்களில்  1010 வெளி மாநில மது   பாட்டில்கள் பறிமுதல் :போலீசார் அதிரடி
X

வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டார்.

Foreign Drinks Bottle Seized

நாகப்பட்டினம் மாவட்ட தனிப்படை காவல்துறையினர் நடத்திய கள்ளச்சாராய ஒழிப்பு வேட்டையில் கடந்த 2 நாட்களில் மட்டும் வெளிமாநில மது கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து 1010 பாண்டி மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகை வெளிப்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஏழை பிள்ளையார் கோவில் அருகில் சட்டத்திற்கு புறம்பாக வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட பாண்டித்துரை (28) த/பெ லட்சுமணன், சுனாமி குடியிருப்பு செல்லுார் நாகப்பட்டினம். என்ற நபரை கைது செய்து, அவரிடமிருந்து 90ML அளவுள்ள 570 பாண்டி மது பாட்டில்கள் மற்றும் 180 ML அளவுள்ள 140 பாண்டி சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தும கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள்.அதே தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகை வெளிப்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட புதிய பேருந்துநிலையம் அருகில் சட்டத்திற்கு புறம்பாக வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 1)மகேஷ்வரி (40) க/பெ.சிவன்காளை, நாகநாதர் கோவில், மேல வீதி வெளிப்பாளையம், நாகப்பட்டினம், 2) திவ்யா க/பெ விஜயகுமார், பாப்பா கோவில், நாகப்பட்டினம், என்ற நபரை கைது செய்து, அவரிடமிருந்து 90ML அளவுள்ள 300 பாண்டி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 19 Nov 2023 6:29 AM GMT

Related News