/* */

கெலமங்கலம் அருகே ஒற்றை யானை தாக்கி முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு

கெலமங்கலம் அருகே ஒற்றை யானை தாக்கியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கெலமங்கலம் அருகே ஒற்றை யானை தாக்கி முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு
X
யானை தாக்கி உயிரிழந்த முதியவர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் அருகே உள்ள நார்பணட்டியை சேர்ந்தவர் பஜ்ஜப்பா (80). கூலித் தொழிலாளி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். தினமும் ஆடுகளை அருகில் உள்ள வனப்பகுதியையொட்டி மேய்ச்சலுக்காக அழைத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலையும் ஆடுகளை மேய்ப்பதற்காக அவர் சென்றுள்ளார். அந்த நேரம் ஒற்றை யானை அங்கு வந்துள்ளது. அதனைப்பார்த்த பஜ்ஜயப்பா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் யானை அவரை விடாமல் துரத்தி சென்று துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் பஜ்ஜியப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து நேற்று மாலை ஆடுகள் வீட்டிற்கு வந்த நிலையில், விவசாயி பஜ்ஜியப்பா வீட்டிற்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடிப் பார்த்தனர். அப்போது நார்ப்பணட்டி வனப்பகுதியில் யானை தாக்கிய நிலையில் பஜ்ஜயப்பா பிணமாக கிடந்தார்.

இது குறித்து அவரது உறவினர்கள் கெலமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யானை தாக்கி பலியான பஜ்ஜப்பா குடும்பத்திற்கு முதல் கட்டமாக வனத்துறை சார்பில் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை உதவி வன பாதுகாவலர் கார்த்தியாயினி வழங்கினார்.

Updated On: 30 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!