/* */

தொழிற்சாலைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்...

விதிமுறைகள் குறித்த கூட்டம்

HIGHLIGHTS

தொழிற்சாலைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்...
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

ஊரடங்கின் போது தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில், தொழிற்சாலை பிரநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசும்போது மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கின் போதும் தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது சுழற்சி முறையில் பணிக்கு வந்து செல்ல ஏதுவாக பணியாளர்களுக்கு உரிய அடையாள அட்டை அந்தந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

தொழில் நிறுவனங்கள் சிறப்பு அலுவலர் ஒருவரை நியமித்து, பணியாளர்களுக்கு கொரோனா உள்ளதா, அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். சிறப்பு அலுவலர்களின் விவரங்கள், மொபைல் எண் விவரத்தினை மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு தெரிவிக்க வேண்டும்.

தொழிற்சாலை நுழைவு வாயில்களில், கை கழுவும் வசதி, கிருமி நாசினிகள் தெளித்தல், பணியாளர்கள் முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சாலை நிறுவனங்களின் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முகாம்கள் நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன்,கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, தொழிற்சாலைகள் இணை இயக்குனர் சபீனா உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 10 May 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  2. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  3. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  4. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  5. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  7. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  8. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  10. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!