/* */

விநாயகர் சதுர்த்தி: கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விநாயகர் சதுர்த்தி: கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு
X

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள். 

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (10ம் தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு இந்த ஆண்டு பிரமாண்ட விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக சென்று கரைக்கவும் அரசு தடை விதித்துள்ளது.

இதனால் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபட உள்ளனர். கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர், காந்தி சாலையில் உள்ள வரசித்தி விநாயகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வரசித்தி விநாயகர், காந்தி நகர் வலம்புரி விநாயகர், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வினை தீர்த்த விநாயகர், மகாராஜகடை சாலை மேல் தெருவில் உள்ள ஞான விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

இதே போல மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பூஜைகள் நடைபெற உள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் 5 ரோடு ரவுண்டானா அருகில் இன்று சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை ஜோராக நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் விநாயகர் சிலைகள், அலங்கார குடைகளை வாங்கி சென்றார்கள். அதே போல பூஜை பொருட்களான தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், பூமாலைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் அதிகமாக இருந்தது. இதனால் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

Updated On: 9 Sep 2021 2:00 PM GMT

Related News