/* */

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க திமுகவிற்கு வாக்களியுங்கள்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் அனைவருக்கும் கிடைக்க திமுவிற்கு வாக்களியுங்கள் என்று திமுக வேட்பாளர் பிரச்சாரம் செய்தார்.

HIGHLIGHTS

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க திமுகவிற்கு வாக்களியுங்கள்
X

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் அனைவருக்கும் கிடைக்க திமுவிற்கு வாக்களியுங்கள் என வேட்பாளர் செங்குட்டுவன் எம்எல்-ஏ., பிரசாரம் செய்தார்.

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 14 ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களுக்கு நேரில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அவர் தாசம்பட்டி, தொட்டிப்பள்ளம், அங்கினாம்பட்டி, பாரதகோவில், குட்டிகானூர், சாப்பரம், பனந்தோப்பு, புங்கம்பட்டி, தாவணிக்கரை, மோரம்பள்ளி, தளியூர் செல்லானூர், பனகமுட்லு, குட்டப்பட்டி மேல் கெகட்டாய்,, குட்டப்பட்டி காலனி, கல்குட்டப்பட்டி, வரட்டம்பட்டி, பன்னிஅள்ளி, கெட்டூர், கரடிஅள்ளி, பீமனூர், தேவர்முக்குளம், சப்பாணிப்பட்டி, கரகூர், ஜெகதாப், மோட்டூர், போத்தாபுரம் உள்பட 70க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மாலை மற்றும் சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே மக்களுக்கு நல்லாட்சி தர முடியும். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தருவோம். இந்த மாவட்டத்திற்கு பாதுகாக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் தந்தது திமுக அரசு. ஆனால் அது அனைத்து கிராமங்களுக்கு சென்றடையாமல் செய்தது அதிமுக அரசு. அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சென்றடைய திமுகவிற்கு வாக்களியுங்கள். எனவே, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Updated On: 1 April 2021 9:00 AM GMT

Related News