/* */

பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையம் செல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடைபெற்றது.

HIGHLIGHTS

பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
X

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 2 ம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, கிருஷ்ணகிரியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தனித்தனியே நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், பாதுகாப்பில் ஈடுபடும் போலீசார் மற்றும் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளருக்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

இந்தப் பரிசோதனையின் முடிவைப் பொறுத்தே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்ல உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யும் முகாம் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம், மற்றும் ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் பரிசோதனை செய்து கொண்டனர்.

Updated On: 29 April 2021 11:40 AM GMT

Related News