/* */

விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

கிருஷ்ணகிரியில் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தவர்களுக்கு அபராதம்
X

கிருஷ்ணகிரியில் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்

கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. . மளிகை, காய்கறி கடைகள் பகல் 12 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மளிகை, காய்கறி கடைகள் நீங்கலாக பிற கடைகள் பகலில் திறந்து வைக்கப்பட்டிருப்பதாகவும், சமூக இடைவெளியை அவர்கள் கடைபிடிக்கவில்லை என அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் தலைமையில அலுவலர்கள் ஆய்வு செய்து விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதே போல கிருஷ்ணகிரி டவுன் மற்றும் பெரியமுத்தூர் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு தொடரும் என்றும், தொடர்ந்து விதிமுறைகளை மீறியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கடைகள் திறந்து வைத்திருந்தால் அபராத தொகை அதிகமாக வசூலிக்கப்படும் என்றும், கடை மூடி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 13 May 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...