/* */

காவல், ஊர்காவல் படை, காவல் நண்பர்களுக்கு பாராட்டு

கரூரில் சோதனைச் சாவடிகளில் சிறப்பாக பணியாற்றும் காவலர்கள், ஊர்காவல் படையினர், காவல் நண்பர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வழங்கி பாராட்டினார்.

HIGHLIGHTS

காவல், ஊர்காவல் படை,  காவல் நண்பர்களுக்கு  பாராட்டு
X

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் பல்வேறு சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரில் சோதனைச் சாவடிகளில் சிறப்பாக பணியாற்றும் காவலர்கள், ஊர்காவல் படையினர், காவல் நண்பர்கள் குழுவினரை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின் பேரில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஒரு சோதனைச் சாவடிக்கு மூன்று காவலர்களுக்கு சிறப்பு பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. கரூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சோதனைச்சாவடியில் சிறப்பாக பணியாற்றிய காவலர், ஊர்க காவல் படை வீரர், காவல் நண்பர்கள் குழுஙை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

கரூர் நகராட்சி பகுதியில் உள்ள 15 சோதனைச் சாவடிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ள காவலர்களை சிறப்பிக்கும் விதமாக கொரோனா தடுப்பு உபகரணங்கான முகக்கவசம், கிருமிநாசினி, கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

Updated On: 1 Jun 2021 6:59 AM GMT

Related News