/* */

கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து மாட்டு வண்டியுடன் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கரூரில் சிபிஎம், சிபிஐ, மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இருசக்கர வாகனத்தை மாட்டு வண்டியில் வைத்து ஊர்வலமாக வந்து கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து மாட்டு வண்டியுடன் போராட்டம்
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கரூரில் மாட்டு வண்டியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

கரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சிபிஐ, சிபிஎம், சிபிஎம்எல் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் நடெபெற்ற ஆர்பாட்டத்துக்கு சிபிஐ மாவட்ட பொருளாளர் நேதாஜி தலைமையில் வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இருசக்கர வாகனத்தை மாட்டு வண்டியில் வைத்து ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இருசக்கர வாகனத்தை மாட்டு வண்டியில் வைத்து ஊர்வலம் வந்தபோது, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது போலீசார் மாட்டு வண்டியை அப்புறப்படுத்த கூறியபோது, போலீசாருக்கும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 29 Jun 2021 6:51 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்